சப்போரோ குளிர்கால கொண்டாட்டம்

யப்பானின் வட மாகாணமான ஒக்கைடோவின் தலை நகரம் சப்போரோவில் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் குளிர்கால கொண்ட்டாம் நடைபெற்று வருகின்றது. பனிசிற்பங்கள் இக்கொண்டாட்டங்களில் முக்கிய அம்சமாகும். இது நகரின் மையப்பகுதிகளான ஓதோரி, சுசுகினோ என்னும் பகுதிகளில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஓதோரி என்பது ஒரு பூங்காவாகும் சுசுகினோ நகரின் வர்த்தக மையமாகும். இது யப்பானின் மிகப்பெரிய குளிர்கால கொண்டாட்டங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டின் 58வது குளிர்கால கொண்ட்டாட்டத்தின் போது 2 மில்லியன் பேர் இதைக் கண்டு களித்தாக கணக்கிடப்பட்டுள்ளது.

இக்கொண்டாத்தின் போது நூற்றுக்கணக்கான சிலைகள் பனிக்கட்டியால் செய்யப்பட்டு ஒதோரி, சுசுகினோ பகுதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். வெளிநாடுகளிலிருந்தும் பல குழுக்கள இக்கொண்ட்டாட்டத்தில் பங்கு கொள்வது வழக்கமாகும். 1974 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டவருக்கான பனிசிற்பப் போட்டி கொண்டாட்டத்தின் அங்கமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. 2008 ஆம் ஆண்டு 14 வெளிநாட்டு அணிகள் பங்கு பற்றின. (வெற்றியை தாய்லாந்து அணி பெற்றுக் கொண்டது)

கொண்ட்டாட்டத்தின் போது செதுக்கப்படும் பனிச்சிற்பங்களின் கருப்பொருட்கள் பலவாரானவை. பொதுவாக பிரசித்தமான கட்டிடங்கள், மனிதர்கள் போன்றவை கருப்பொருளாக காணப்படும். ஒவ்வொரு ஆண்யும் சுமார் 400 பனிச்சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்படும் இதில் 300க்குமதிகமானவை ஓதோரியில் காணப்படும். இரவில் இச்சிற்பங்கள் ஒளியூட்டப்பட்டுக் காணப்படும்.

இக்கொண்டாட்டம் 1950 ஆம் ஆண்டு 6 சிலைகளுடன் 6 பாடசாலை மாணவர்களால் தொடங்கப்பட்டது. 1955 ஆண்டு சப்போரோ நகருக்கு அருகிலுள்ள மகோமனாய் தளத்தைச் சேர்ந்த யப்பானிய தற்காப்புப் படையினரும் இதில் இணைந்துக் கொண்டனர். யப்பானிய தற்காப்புப் படையினர் கொண்டாட்டத்தில் பாரிய அளவிலான பனிச் சிற்பங்களைச் செய்யத் தொடங்கினர். இரண்டாம் உலகப் போர்க்காலத்தை தவிர்த்து இக்கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. பனி குறைவான ஆண்டுகளில் யப்பானிய தற்காப்புப் படையினர் வேறு இடங்களிலிருந்து பனியை கொண்டுவந்து சிற்பங்களைச் செய்ய உதவுகிறார்கள்.


ஓதோரி, சுசுகினோ தவிர்ந்த சுடாலண்ட் என்ற இடத்திலும் பனிச் சிற்பன்பங்கள் செய்யப்படுகின்றன. இவை குழந்தைகளுக்கு விளையாடும் இடங்களை அமைத்துக் கொடுக்கும் விதமாக செய்யப்பட்டிருக்கும்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது நேர்முக நிகழ்ச்சிகளை நடாத்த பனியால் மேடைகளை அமைத்து அங்கிருந்து நிகழ்ச்சிகளை ஒளிஒலிபரப்புகின்றன. இதை தவிர உணவகங்கள், கால்களுக்கு வெந்நீர் குளியல் என்பனவும் இங்கே காணப்படும்.

3 கருத்துக்கள்:

    terens, வருக வலைப்பதிவுலகுக்கு :) யப்பானைப் பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

Blogger Templates by Blog Forum